அனிதாவை அரளவைக்கும் அடிப்பொடிகள்!

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கனிமொழியின் கண்ணசைவில் தூத்துக்குடி திமுக இருப்பதால், தன் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் ரொம்பவே கவமனாக இருக்கிறார், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அதனால், கண்ட இடத்திலும் தனது பெயரைச் சொல்லி ஏடாகூடம் ஏதும் செய்துவிடக்கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு அணைபோட்டு வைத்திருக்கிறாராம். ஆனாலும் எங்காவது போய் ஏழரையை இழுத்துவிடுகிறார்களாம். அப்படித்தான், போக்குவரத்துக் காவலர் ஒருவரை அனிதாவின் உதவியாளர் கிருபாகரன் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையானது. அடுத்ததாக, திருச்செந்தூர் கோயில் அன்னதான திட்ட சமையல் கலைஞர்கள் உட்பட 60 புதிய பணியிடங்களுக்கு அனிதாவின் ஆதரவாளர்கள் நீளமாக கைநீட்டிவிட்டார்களாம். இதைக் கண்டித்து பாஜக போராட்டத்தில் குதித்துள்ளது. என்ன சொல்லியும் கேட்காமல், இப்படி தனது அடிப்பொடிகள் அடுத்தடுத்து நடத்தும் அதிரடிகளால் அரண்டுபோய்க் கிடக்கிறாராம் அனிதா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in