உபத்திரம் கொடுக்கும் உதவியாளர்!

உபத்திரம் கொடுக்கும் உதவியாளர்!

அரசியல்வாதிகளுக்கு உதவியாளர்கள் என்றாலே உபத்திரவாதிகள் தான் போலிருக்கிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் இதற்கு ஐஎஸ்ஐ உதாரணம். திருச்செந்தூரில் போக்குவரத்துக் காவலர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக முன்பு சர்ச்சையில் சிக்கினார் கிருபாகரன். அனிதா தலையிட்டு அந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசிமுடித்தார். இப்போது அடுத்த சர்ச்சை. ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த சாந்தா என்பவர் தூத்துக்குடி எஸ்பி-யிடம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ‘எங்களுக்குச் சொந்தமான நிலத்தை இன்னொரு கும்பல் ஆக்கிரமிக்கும் நோக்கில் சேதப்படுத்தியது. இதுகுறித்து ஆதாரங்களுடன் நாங்கள் புகார் கொடுத்ததால் போலீசில் வழக்கும் போட்டார்கள். ஆனால், அந்தப் புகாரை வாபஸ் வாங்குமாறு அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் எங்களை வீட்டுக்கே வந்து மிரட்டுகிறார்’ என்று இருந்ததாம். புகாரைக் கொடுத்துவிட்டு சாந்தா அந்தப் பக்கம் போனதுமே விஷயத்தை உடனடியாக அனிதாவின் காதில் போட்டுவிட்டார்களாம் காக்கிகள். அண்ணாச்சிதான் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in