அன்பிலைக் கண்டா வரச் சொல்லுங்க..!

ஸ்டாலினுடன் மகேஷ்...
ஸ்டாலினுடன் மகேஷ்...


தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரநிதிதுத்துவம் இல்லாததால் திருச்சியின் மைந்தரான அமைச்சர் அன்பில் மகேஷை தஞ்சைக்கும் பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. முழு நேரமும் திருச்சியிலிருந்து கொண்டு அமைச்சர் நேருவுடன் நேருக்கு நேராய் முட்டக்கூடாது என்ற உள்ரகசியமும் இந்த நியமனத்தின் பின்னணியில் உண்டு. இந்த நிலையில், அறிவித்த புதிதில் அடிக்கடி தஞ்சைப் பக்கம் ஆஜரானார் அன்பில் மகேஷ். ஆனால், இப்போதெல்லாம் எப்போதாவது தான் எட்டிப் பார்க்கிறாராம். இதனால், பொறுப்பு அமைச்சரைச் சந்திக்க முடியாமல் பொதுமக்கள் புலம்பித் தவிக்கிறார்கள். எம்எல்ஏ-க்களிடம் குறைகளைச் சொன்னால், “எங்களுக்கெல்லாம் எந்த அதிகாரமும் கிடையாது. எல்லாம் அமைச்சர் தான்” என்று அன்பிலாரைக் கைகாட்டி அப்பீட் ஆகிறார்களாம். இப்படி பொறுப்பைத் தட்டிக்கழிப்பது நியாயமா? என்று திமுக எம்எல்ஏ-க்களைக் கேட்டால், ”என்னங்க பண்றது... ஏதாச்சும் நிகழ்ச்சின்னா தான் மகேஷ் இந்தப் பக்கம் வந்து போறார். அப்படி வர்றப்பயும் நாங்க ஏதாச்சும் சொன்னா, பெருசா காதுல் வாங்கிக்கிறது இல்ல. மக்கள் கேட்கிற கேள்விக்கு எங்களால பதில் சொல்லமுடியல. இன்னும் நாலு வருசத்த எப்படித்தான் ஓட்டப் போறோமோ தெரியல” என்று வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in