அண்ணாச்சியை நம்பி அடமான மேளா!

அண்ணாச்சியை நம்பி அடமான மேளா!
முத்துச்செல்வி

சங்கரன்கோவில் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி. 2021 தேர்தலில் தனக்கு மீண்டும் அதிமுகவில் சீட் கொடுக்காததால், திமுகவில் ஐக்கியமானார். திமுகவிலும் இவருக்கு சீட் கிடைக்கவில்லை இந்த நிலையில், எம்எல்ஏ ஆவதற்கு முன்பாக, தான் வகித்து வந்த சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவிக்கு இப்போது அடிப்போடுகிறா் அம்மிணி. இதுகுறித்து, தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபனிடம் பேசினாராம். அதற்கு, நம்ம மாவட்டத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ் ஆர். அண்ணாச்சி தான். இது விஷயமா அவருகிட்டயே நீங்க பேசிடுங்க” என்றாராம் பத்து. அதன்படியே அண்ணாச்சியைப் போய்ப் பார்த்திருக்கிறார் முத்துச்செல்வி. அவரைப் பார்த்துவிட்டு வந்த நாளில் இருந்து, தனது சொத்துகளை அடமானம் வைத்துப் பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார் முத்துச்செல்வி. “2 கோடி ரூபாயை உங்களால புரட்ட முடிஞ்சா புரட்டிக் கொண்டாந்து என்னிடம் கொடுங்கள். உங்களை சேர்மனுக்கு நிறுத்தி ஜெயிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று அண்ணாச்சி சொன்னாராம். அதை நம்பித்தான் அடமான மேளாவை தொடங்கி இருக்கிறாராம் அம்மிணி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in