கோலப்பனின் ‘அருமை’களைத் துருவும் ஈபிஎஸ் டீம்!

ஓபிஎஸ்சுடன் கோலப்பன்
ஓபிஎஸ்சுடன் கோலப்பன்

பொன்னையனுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு ஒரேநாளில் வைரல் ஆனார் நாஞ்சில் கோலப்பன். இதைத் தொடர்ந்து இப்போது அவரது ஆதியைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறது ஈபிஎஸ் முகாம். முன்பு சரத்குமார் மன்ற மாவட்டத் தலைவராக இருந்த நாஞ்சில் கோலப்பன், கோல்டு கவரிங் கடை ஒன்றை நடத்தி வந்தபோது ஏலச்சீட்டு நடத்தி சிக்கலில் மாட்டினாராம். அதில் தொடங்கி 2006-ல் அவர் அதிமுகவில் ஐக்கியமானது வரை பல விஷயங்களைத் துருவி எடுத்திருக்கிறார்கள். ஓபிஎஸ்சின் தர்மயுத்தத்துக்குப் பிறகே குமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆனாராம் கோலப்பன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இன்னொரு மோசடி வழக்கில் இவர் கைதான விவகாரத்தையும் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது ஈபிஎஸ் தரப்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in