அதனால் தான் ஆவுடையப்பனுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கலியா?

ஆவுடையப்பன்
ஆவுடையப்பன்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு எதிராக நெல்லை திமுகவினரே புகைச்சலைக் கிளப்புகிறார்கள். கட்சிக்காரர்களிடமே ‘கறாராக’ நடந்துகொள்வதாக ஆவுடையப்பனுக்கு எதிராக அறிக்கை வாசிக்கிறார்கள். இதுபற்றிய தாக்கீதுகள் தலைமை வரைக்கும் பறந்ததால், முக்குலத்தோரான ஆவுடையப்பனை மாற்றிவிட்டு அந்தப் பதவியில் நாடார் ஒருவரை அமர்த்த திட்டமிடுகிறதாம் திமுக தலைமை. அந்தவகையில், திமுக வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலாளர் கிரஹாம் பெல்லின் பெயர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு பலமாக அடிபடுகிறது.

சிவபத்மநாபன்
சிவபத்மநாபன்

இதனிடையே, “சமீபத்தில் ஆவுடையப்பன் ஸ்டாலினைச் சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார்; கிடைக்கவில்லை. அதைவைத்துப் பார்த்தால் மா.செ.மாற்றம் உறுதிதான்” என்றும் சிலர் ஆருடம் சொல்கிறார்கள். இதேபோல், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபனுக்கு எதிராகவும் தலைமையிடத்தில் தட்டுப்பாடு இல்லாமல் புகார்கள் குவிகிறதாம். கட்சிப் பதவிகளை ‘கட்டிங்’ பேசி கொடுப்பதாகவும் இவர் மீது புகார்கள் உண்டு. கனிமொழியையே மிரளவைத்தவர் என்று இவரது ‘நிதியாளும் திறமை’யை திமுகவினரே திகைத்துப் போற்றுகிறார்கள். இவரையும் மாற்றிவிட்டு இவருக்குப் பதிலாக திமுக தீர்மானக்குழு உறுப்பினர் சரவணனை மாவட்டச் செயலாளராகக் கொண்டுவர வேகமாக வேலைகள் நடக்கிறதாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in