ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சிவசங்கருக்கும் மல்லுக்கட்டு ஆரம்பம்!

ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சிவசங்கருக்கும் மல்லுக்கட்டு ஆரம்பம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்தலுக்காக நீலகிரி பக்கம் போய்விட்டாலும் இன்னமும் தனது சொந்த மண்ணான பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுகவில் தனது ஆதிக்கத்தை கடுகளவும் குறையாமல் வைத்திருக்கிறாராம். இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் போக்குவரத்து அமைச்சர் ஆனபிறகு அவரும் தன் பங்குக்கு அதிகார அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதனால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆ.ராசா கோஷ்டியா, சிவசங்கர் கோஷ்டியா என திமுக ரெண்டுபட்டு நிற்கிறது. திமுக தலைமையிலேயே ஒரு தரப்பு ஆ.ராசாவை ஆதரிக்க, இன்னொரு தரப்பு சிவசங்கரை ஆராதிக்கிறதாம். அதனால் தான் அவருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி லகுவானதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இம்மாத இறுதியில் அரசு விழாக்களுக்காக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு வருகிறார் ஸ்டாலின். அந்த சமயத்தில் தங்களின் ஜபர்தஸ்தைக் காட்ட சிவசங்கர் கோஷ்டியும் ஆ.ராசா கோஷ்டியும் ஆளுக்கொரு பக்கம் அணிதிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அநியாயத்துக்கு அமளி துமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது அரியலூர் - பெரம்பலூர் திமுக.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in