ஆண்டனிக்கும் அனுதாபம் கை கொடுக்குமா?

ஆண்டனிக்கும் அனுதாபம் கை  கொடுக்குமா?
ஏ.கே.ஆண்டனி

கேரள மாநிலம் திருக்காக்கரைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வான பி.டி.தாமஸ் இறப்பைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகள் இன்னமும் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கும் நிலையில், தாமஸின் மனைவி உமா தாமஸை தமது வேட்பாளராக அறிவித்து களப்பணியைத் தொடங்கிவிட்டது காங்கிரஸ். தொகுதிக்குள் வலுவாக இருக்கும் சிறுபான்மையின மக்களின் வாக்குகளும், தாமஸ் மறைவால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலையும் மீண்டும் இங்கே காங்கிரசை ஜெயிக்கவைக்கும். அதனால் உமாவையே நிறுத்தலாம் என்ற யோசனையைச் சொன்னவர் டெல்லி அரசியலிலிருந்து அண்மையில் மாநில அரசியலுக்குத் திரும்பி இருக்கும் சீனியர் தலைவர் ஏ.கே.ஆண்டனியாம். சொன்னது போல் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மாநில காங்கிரஸ் அரசியலில் ஆண்டனியின் கை மேலோங்கும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.