போலி பாஸ்போர்ட்; போலீஸாரும் கைது?

போலி பாஸ்போர்ட்; போலீஸாரும் கைது?

மதுரையில் ஒரே முகவரியில் 53 பேருக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தின் ஆணிவரை தேடி வெளியில் தெரியாமல் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ). இந்த விவகாரத்தில், செய்யாத தவறுக்காக தனக்கெதிராக சிலர் திட்டமிட்டே அவதூறு பரப்புவது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகக் கவலை தெரிவித்திருக் கிறார் உளவுத்துறை கூடுதல் டிஜிபி-யான டேவிட்சன் தேவாசீர்வாதம்.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

இந்த வழக்கு க்யூ பிரிவு விசாரணையில் இருந்தபோதும், இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கடல் கடந்து பயணித்திருக்கிறார்கள் என்பதால் என்ஐஏ-வும் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறது. போலியாகப் பெறப்பட்ட 53 பாஸ்போர்ட்களில் 52 பாஸ்போர்ட்கள் மூலமாக ஒருமுறை மட்டுமே பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ஒரே ஒரு பாஸ்போர்ட் மட்டும் மறு பயணத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பயணம் மதுரைகே மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது. அப்படி, போலி பாஸ்போர்ட் மூலம் மதுரைக்குத் திரும்பி வந்த நபரை இப்போது நுணுக்கமாகத் தேடிக் கொண்டிருக்கிறதாம் என்ஐஏ. இந்த நபரைப் பிடித்தால் மற்ற 52 பேரையும் வளைப்பது எளிது என்கிறார்கள். இதனிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல் துறையின் கீழ்மட்டத்தில் இருக்கும் சிலரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்பதை க்யூ பிரிவு போலீஸாரே உறுதிப்படுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in