அடுத்த துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி?

கனிமொழி
கனிமொழி

திமுகவின் உயர்மட்ட பொறுப்புகளில் ஒன்று துணைப் பொதுச்செயலாளர் பதவி. திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த சுப்புலெட்சுமி ஜெகதீசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, சுப்புலட்சுமி வகித்துவந்த பதவிக்கு கனிமொழியின் பெயர் அறிவாலய வட்டாரத்தில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால், “தூத்துக்குடி எம்பி என்ற அளவிலேயே தனது அரசியல் முடங்கிப்போய்விட்டதாக ஆதங்கத்தில் இருக்கும் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி என்பது அடுத்தகட்ட அங்கீகாரம் தான் என்றாலும், திமுக குடும்பத்துக்குள் இருப்பவர்கள் இதை எந்தளவுக்கு பாஸிட்டீவாக பார்ப்பார்கள் என்று தெரியவில்லையே” என்கிறார்கள் கனிமொழி விசுவாசிகள். இதனிடையே, செந்தில் பாலாஜி கோவைக்கு பொறுப்பு அமைச்சராகப் போனபிறகு தான் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு உயர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்துவந்த பதவியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கே வழங்க வேண்டும் எனவும் சிலர் இப்போதே கோரிக்கைக் குரல் எழுப்புகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in