பட்டியலில் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன்?

ஜெயலலிதாவுடன் பழனியப்பன்...
ஜெயலலிதாவுடன் பழனியப்பன்...

கடந்த சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் செவ்வனே களப்பணியாற்றாத மாவட்டச் செயலாளர்கள் மீதும், கட்சிக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் மாவட்ட செயலாளர்கள் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. எவ்வித சமரசமும் இல்லாமல் இவர்களில் சிலரை மாற்றவும் முடிவெடுத்திருக்கிறதாம் தலைமை. அந்த வகையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் தடங்கம் சுப்பிரமணி மீதும் தலைமைக்கு திருப்தியான ஒப்பீனியன் இல்லை என்கிறார்கள்.

ஸ்டாலினுடன் தடங்கம் சுப்பிரமணி...
ஸ்டாலினுடன் தடங்கம் சுப்பிரமணி...

இவரை மாற்றிவிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் தருமபுரி எம்பி-யான செந்தில்குமாரை அமர்த்தலாம் என தலைமையில் முதலில் பேச்சு ஓடியதாம். ஆனால், தலைமையின் முடிவுகளையே நாசூக்காக குத்திக்காட்டி பேசிவரும் அவரை நியமித்தால் தேவையற்ற சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், தருமபுரி கிழக்கு திமுகவின் அடுத்த மாவட்டச் செயலாளர் லிஸ்ட்டில் அமமுக வரவான முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனின் பெயரும் பலமாக அடிபடுகிறது. அமமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜி எப்படி தடாலடியாகச் செயல்பட்டு திமுகவுக்கு பலம் சேர்க்கிறாரோ அதே ரூட்டில் பயணித்து இவரும் பலம் கூட்டுவார் என தருமபுரி திமுகவினர் சிலரே பழனியப்பனுக்கு சர்டிஃபிகேட் கொடுக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in