அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் ஆளும்கட்சி சேர்மன்!

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

உள்ளாட்சித் தேர்தலில் குமரி மாவட்டத்தில் திமுக தலைமை அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளரை வீழ்த்தி குழித்துறை நகராட்சி சேர்மன் ஆனவர் குழித்துறை நகர திமுக செயலாளர் பொன்.ஆசைத்தம்பி. இதனால் அமைச்சரும் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோதங்காஜுக்கும் முட்டிக்கொண்டது. இந்த நிலையில், ஆசைத்தம்பியிடமிருந்து நகர செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அமைச்சர் மனோதங்கராஜ் தான். அவர், தன்னை அரசியலைவிட்டு ஒழிக்கப்பார்க்கிறார் என்று பொங்கினார் ஆசைத்தம்பி. இந்த நிலையில், “குழித்துறை நகராட்சியில் சாலைகள் அமைக்க 15 கோடி ரூபாய்க்கு அனுமதியளித்த பிறகும் சாலைகளைப் போடாமல் ஒட்டு வேலை பார்க்கிறார்கள். சாலை போடும் பணியை கான்ராக்ட் எடுத்திருக்கும் ஒப்பந்ததாரரும் மனோதங்கராஜும் பேசிவைத்துக் கொண்டு இப்படி என் பெயரைக் கெடுக்கிறார்கள்” என்று ஓப்பனாகவே பேசிவருகிறார் ஆசைத்தம்பி. இதனிடையே, அண்மையில் கேரளம் வந்திருந்த முதல்வரைச் சந்திக்க ஆசைத்தம்பியும் சென்றிருந்தாராம். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலேயே உள்ளேவிடவில்லையாம். இதுவும் மனோதங்கராஜின் சதிதான் என நட்பு வட்டத்தில் ஆதங்கத்தைக் கொட்டினாராம் ஆசை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in