கலைஞர் சிலையை உடைத்த ‘கல’கத்தினர்!

கலைஞர் சிலையை  
உடைத்த ‘கல’கத்தினர்!
உடைக்கப்பட்ட சிலை

புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டத்தில் இருக்கிறது. அதன் விளைவு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்த கருணாநிதி, அண்ணா சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தும் அளவுக்கு போயிருக்கிறது. பட்டப்பகலில் நுழைந்து சேதப்படுத்தியவர்கள் யார் என்று தெரிந்தும், அவர்கள் மேல் போலீஸில் புகார் கொடுக்காமலும், கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமலும் தவிர்த்து விட்டார் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன். கட்சியினர் கேட்டதற்கு, ”எல்லாம் நம்ம கட்சிக்காரங்கதானே... ஏதோ கோபத்துல செஞ்சுட்டாங்க, போனாப்போறாங்க விடுங்க” என்றாராம். இவரது இந்த குணாதிசயத்தைக் கண்டு நெகிழ்ந்த எதிர்க்கோஷ்டியினர், ”உடைச்ச நாங்களே புதுசா சிலைகளை செஞ்சு குடுத்துடுறோம்னு அவருக்கிட்ட சொல்லுங்க” என்று தூதுவிட்டிருக்கிறதாம். ஆனால், “என்னதான் பிரச்சினைனாலும் அண்ணா, கலைஞர் சிலைகளை எப்படி உடைக்கலாம்?” என்று கச்சைக்கட்டி நிற்கிறதாம் செல்லப்பாண்டியன் கோஷ்டி.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.