சாதியைச் சொல்லித்தானா சமாளிக்கணும்?

சாதியைச் சொல்லித்தானா சமாளிக்கணும்?

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது திமுக அரசு. ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் அரசுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன. போராட்டத்தில் குதிப்பதற்கான ஆலோசனைகளும் நடக்கின்றன. இந்த நடவடிக்கைகளை சமாளிக்கும் விதமாக சென்னையில்  ‘டாக்டர் கலைஞர் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பு’ என்று ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் பின்னணியில் இருப்பவர் இசை வேளாளார் நலச் சங்கத்தின் மாநில தலைவரான கே.ஆர்.குகேஷ் என்கிறார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில் திருச்சி லால்குடியில் அடுத்த மாதம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். அரசு ஊழியர் போராட்டத்தை சமாளிக்க எத்தனையோ வழிகள் இருக்க, சாதியையா கையில் எடுக்க வேண்டும் என்று முகம் சுளிக்கிறார்கள் அரசியல் சாராத நடுநிலையான அரசு ஊழியர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in