நித்திரையைக் கெடுத்த ‘நிரந்தர சட்டமன்றமே’!

நித்திரையைக் கெடுத்த ‘நிரந்தர சட்டமன்றமே’!

காரைக்குடி காங்கிரஸ் எம்எல்ஏ-வான மாங்குடி கார்த்தி, சிதம்பரத்தின் தீவிர விசுவாசி. அதனாலேயே, அவருக்கு இம்முறை காரைக்குடி சீட்டை வாங்கிக் கொடுத்தார் கார்த்தி. இந்த நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி மாங்குடிக்கு பிறந்தநாள் வருகிறது. இதை யொட்டி அவரது ஆதரவாளர்கள்  ‘நிரந்தர சட்டமன்றமே’ என்று விளித்து, சில இடங்களில் பதாகைகளை வைத்ததுடன் அதை ஆர்வத்துடன் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார்கள். இதைப் பார்த்துவிட்டு டென்ஷனான கார்த்தி, “யாரைக் கேட்டு இப்படியெல்லாம் செய்றீங்க? என்று அலைபேசி வழியே ஆவேசப்பட்டாராம். அதற்கு, “ஏதோ ஆர்வத்துல வெச்சுட்டாங்க... என்ன பண்ணலாம்” என்று மாங்குடி விசுவாசிகள் கேட்க,  “வெச்சா என்ன... எல்லாத்தையும் கிழிச்சுப் போடுங்கய்யா” என்று எகிறித் தள்ளிவிட்டாராம் கார்த்தி. இந்த சமாச்சாரத்தைக் கேள்விப்பட்டு எதிர்முகாமில் முன்னாள் எம்எல்ஏ-வான கே.ஆர்.ராமசாமி கோஷ்டி, கும்மியடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ‘நிரந்தர சட்டமன்றமே’ பேனரை இப்போது, ‘எங்கள் சட்டமன்றமே’ என்று திருத்திக் கொண்டிருக்கிறதாம் மாங்குடி முகாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in