வானதி வந்திருக்க வேண்டாமாங்க?

வானதி வந்திருக்க வேண்டாமாங்க?

பாஜக தோற்றுப்போன 16 மாவட்டங்களில் தோல்விக்கான காரணத்தை அறிய விசாரணைக் குழுவை அனுப்பி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாஜக தலைமை, 4 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெற வைத்த பாஜக மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சியிலும் தள்ளியது. வானதி சீனிவாசனை ஜெயிக்க வைத்து அப்படி இன்னோவா காரைப் பரிசாக பெற்ற கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், தன்னோடு சேர்ந்து உழைத்த மண்டல் தலைவர்கள் 4 பேருக்கு அரை சவரன் மோதிரத்தை அன்பளிப்பாக தந்து அசத்தினார். இதைச் சற்றும் எதிர்பாராத 4 மண்டல்களும் திக்குமுக்காடிப் போன அதேநேரம்,  “வானதிக்காகத்தானே இத்தனை பேரும் உழைத்தார்கள். அப்படி உழைத்தவர்களை கவுரவப்படுத்த வானதி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டாமோ” என பாஜக பொறுப்பாளர்கள் முணுமுணுத்ததையும் நிகழ்விடத்தில் கேட்கமுடிந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in