பொல்லாப்புக்கு ஆளான பொன்முடி!

பொல்லாப்புக்கு ஆளான பொன்முடி!

விழுப்புரத்திலிருந்து பிரிந்துவிட்டாலும் பழைய பாசத்தில் இன்னும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுகவிலும் அடிக்கடி மூக்கை நுழைக்கிறாராம் அமைச்சர் பொன்முடி. அங்கே தனது மகனும் எம்பி-யுமான கவுதமசிகாமணிக்கும், விக்கிர வாண்டி எம் எல்ஏ-வான புகழேந்திக்கும் கூடுதல் முக்கியத்துவம் தருகிறாராம் பொன்முடி. இதனால், பொன்ஸ் கலந்து கொள்ளும் விழாக்களை சாதுர்யமாக தவிர்க்கும் மாவட்டத்தின் மற்ற 3 எம்எல்ஏ-க்களும் பொன்முடியின் தலையீடுகள் குறித்து தலைமையிடமும் புலம்பினார்களாம். இதையடுத்து, பொன்முடியை ஒதுக்கிவிட்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலுவை நியமித்திருக்கிறது திமுக தலைமை.
 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in