அரண்டு ஓடும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!

அரண்டு ஓடும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்ததற்குப் பின்னால், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்களாம். வேலுமணி விசுவாசிகளான தங்களைத் தேடியும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வரலாம் என்ற அச்சமே இதற்குக் காரணம். இதனிடையே, “சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்தால் போலீஸ் அவ்வளவு ஈஸியா கைது பண்ண முடியாது” என்று யாரோ சில புத்திமான்கள் சொன்ன யோசனையைக் கேட்டு, சிங்காநல்லூர் தொகுதி எம் எல்ஏ-வான கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ ஹாஸ்டலில் நிரந்தரமாக தங்க முடிவெடுத்து, அங்கே கணபதி ஹோமம் எல்லாம் நடத்திவிட்டாராம். இவர் வழியில் கோவை அதிமுக எம்எல்ஏ-க்களில் இன்னும் சிலரும் சென்னைக்கு ஜாகை மாற தயாராகி வருகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in