அவரு சும்மா இருந்தாலும்...

அவரு சும்மா இருந்தாலும்...

‘அரசியலே வேண்டாமப்பா சாமி’ என்று ரஜினி ஒதுங்கி ஒதுங்கி ஓடினாலும் அவரது ரசிகர்கள் சும்மாவே இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கலுங்கடி சதீஸ்பாபு. பிசியோதெரபிஸ்ட்டான இவர், ரஜினி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த போது அவர் நலம்பெற வேண்டி மொட்டை போட்டுக் கொண்டவர். தொடர்ந்து ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி பதிவுகளைப் போட்டுக் கொண்டிருந்த இவரை, மன்றத்திலிருந்தே கட்டம்கட்டினார் ரஜினி. அப்படியும் அசராதவர் தற்போது, ‘தமிழ்நாடு ரஜினிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்கம்’ என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து, ரஜினி ரசிகர்களிடம் ஆதரவு திரட்டிவருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in