பலம் காட்டிய பாலாஜி!

பலம் காட்டிய பாலாஜி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவதற்காக டெல்லிக்குப் போகவில்லை. தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடைகேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவே சென்றிருந்தார் என கடந்த இதழில் சொல்லி இருந்தோம். அதுப்படியே உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டுவிட்டார் பாலாஜி. வழக்கை இப்படி இழுத்தடிப்பதற்காக பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் குட்டுவைத்தது ஒருபுறமிருக்க, வந்த வேலையை முடித்துக் கொண்டு டெல்லியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட பாலாஜி, மதுரை விமான நிலையத்தில், கோவையில் வேலுமணிக்கு கூடியது போல் தனக்கும் ஆதரவாளர்களை திரட்ட வேண்டும் என தனது அடிப்பொடிகளுக்கு ஆணையிட்டிருந்தாராம். அதன்படியே, குவாட்டர், கோழி பிரியாணி, வாகன வசதி எல்லாம் செய்துகொடுத்து கூட்டத்தைக் கூட்டிவிட்டார்களாம். அடுத்து, தனது வீட்டில் ரெய்டு நடந்தாலும் இதேபோல் கூட்டத்தைக் கூட்டி பலத்தைக் காட்டும் திட்டத்தில் இருக்கிறாராம் ரா.பா.

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.