சபாஷ்... சரியான போட்டி

சபாஷ்... சரியான போட்டி

சிவகங்கை காங்கிரஸில், முன்னாள் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையிலான பனிப்போர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புகைந்து கொண்டே இருக்கிறது. காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலை அருகே, சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு கார்த்தி சிதம்பரம் தேசியக் கொடி ஏற்றுவதாக முதலில் அறிவித்தார்கள். ஆனால், அதே நேரத்துக்கு அதே இடத்தில் ராமசாமியும் கொடியேற்றப் போவதாக இன்னொரு தகவல் வெளியானது. ராமசாமியுடன் மோத விரும்பாத கார்த்தி, பேசாமல் எட்டரை மணிக்கெல்லாம் எம்பி அலுவலகத்திலேயே கொடியேற்றி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார். இதைத் தொடர்ந்து தனது பரிவாரங்கள் புடைசூழ வந்த ராமசாமி, ராஜீவ் காந்தி சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பழையபடி திருவாடானை பக்கம் போய்விட்டாலும் காரைக்குடியிலும் கார்த்திக்குக்கு செக்வைக்கும் ராமசாமி, அடுத்ததாக செப்டம்பர் 16-ம் தேதி ப.சிதம்பரம் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்குடி நகரின் பிரதான இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கொடியை ஏற்றப் போகிறாராம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.