அன்புத் தொல்லை கொடுக்கும் ஆர்பி!

அன்புத் தொல்லை கொடுக்கும் ஆர்பி!

அதிமுக ஆட்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் செய்திகளைத் தாங்கிவராத இதழ்களே இருக்காது. அந்த அளவுக்கு ஊடகங்களில் கொடிகட்டிப் பறந்தவர் ஆர்.பி.உதயகுமார். ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியதால், தன்மீது ஊடகவெளிச்சம் பாய்வதற்காக இளைஞரணி, மகளிரணி, மீனவரணி என்று தினமும் ஏதாவது ஒரு அணியின் கூட்டத்தை நடத்தி அதுகுறித்த செய்திகளை, தானே பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் மனிதர். அதையெல்லாம் பத்திரிகைகள் அவ்வளவாய் கண்டுகொள்ளவில்லை என்றதும், தனக்கே தனக்காய் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துவிட்டார். இப்போது சொற்பொழிவுகள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் அந்தச் சேனலில் பதிவேற்றிவிட்டு அதுகுறித்த இணைப்பை கட்சியினருக்கு அனுப்பி வைக்கும் ஆர்பி, பின்னாலேயே போன் போட்டு, “சேனலைப் பார்த்தீங்களா இல்லியா... வியூஸ் எண்ணிக்கை கூடவே இல்ல” என்று கேட்டு அநியாயத்துக்கு அன்புத் தொல்லை கொடுக்கிறாராம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.