என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா?

என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா?

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் வென்ற கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருக்கிறார். கடந்த வாரம் அலுவல் காரணமாக திருப்பூர் வந்த அமைச்சர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தாராம். அப்போது அவரை வரவேற்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தின் தட்டச்சர் வந்திருந்தாராம். இதை ரசிக்காத அமைச்சர், தட்டச்சரிடம் ஏகத்துக்கும் கடுகடுப்பைக் காட்டினாராம். இதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயந்தி அங்கிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். துறை அமைச்சரை வரவேற்கப் போகாமல் மெத்தனம் காட்டியதுதான் ஜெயந்தியைக் காத்திருப்போர் பட்டியலில் காக்கவைத்ததற்கு காரணம் என காதைக்கடிக்கிறார்கள், திருப்பூர் கலெக்டரேட் வட்டாரத்தில்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in