போட்டுக் கொடுத்தது போலீஸ் அதிகாரியா?

போட்டுக் கொடுத்தது போலீஸ் அதிகாரியா?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட சொத்து விவகாரங்களை விசாரித்துக் கொடுக்கும் பொறுப்பை, திருச்சி சரகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவரிடம் ரகசியமாக ஒப்படைத்திருந்தார்களாம். இவரிடம் கொடுத்தால் வேலை கச்சிதமாக நடக்கும் என அமைச்சர் கே.என்.நேருவும் சிபாரிசு செய்திருந்தாராம். ஆனால், வேலுமணிக்கு எதிராக இப்படியொரு மூவ் நடப்பதை சாதிப் பற்றில் சொல்லக்கூடாத இடத்தில் சொல்லிவிட்டாராம் அந்த காவல் அதிகாரி. ரெய்டை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் பின்னணியை விசாரிக்கும் போலீஸார், இந்த விவகாரத்தையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார்களாம். இதே அதிகாரியிடம் தான், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சம்பந்தமான சொத்துக் குவிப்பு விவகாரங்களையும் விசாரித்துக் கொடுக்கும்படி கேட்டிருந்தார்களாம். விவகாரம் வில்லங்கமாகி விட்டதால், திருச்சி சரக காவல் அதிகாரி சீக்கிரமே டம்மியாக்கப்படலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in