வாட்ஸ் - அப் செக்யூரிட்டி!

வாட்ஸ் - அப் செக்யூரிட்டி!

அமமுகவிலிருந்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தாவுவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இப்படி ஜம்ப் ஆகிறவர்களைக் கண்காணிக்க அமமுக தலைமை ஒரு பிளான் போட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மாவட்டத்திலும் நிர்வாகிகளை உள்ளடக்கிய வாட்ஸ் -அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர் அட்மினாம். குழுவில் உள்ள யாராவது ஒருவர் சசிகலா, டிடிவி தினகரன் படத்தை டிபி-யாக வைக்காமல் இருந்தால், உடனே அந்த நிர்வாகிக்கு போன் போட்டு விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார் களாம். தினகரன், சசிகலா படத்தை டிபி-யாக வைக்காதவர்கள் கட்சிமாறக் கூடும் என்பதால், இப்படியிரு அலர்ட்டாம். அனைத்து மாவட்டங் களிலும் செயல்படும் இந்த வாட்ஸ் - அப் குழுக்களை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் பொறுப்பை, முன்னாள் அமைச்சர் செந்தமிழனிடம் ஒப்படைத்திருக்கிறாராம் டிடிவி.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in