ஹாட் லீக்ஸ்- நானும் கார்பென்டர்தான் கண்ணா!

ஹாட் லீக்ஸ்- நானும் கார்பென்டர்தான் கண்ணா!

நானும் கார்பென்டர்தான் கண்ணா!

நட்சத்திரப்படி கடந்த 2-ம் தேதியே ரஜினிக்கு பிறந்த நாள் வந்துவிட்டதாம். அன்றைய தினம், தனது நெருங்கிய உறவினர்களையும் நட்பு வட்டத்தையும் வீட்டுக்கு அழைத்து சிறப்பு யாகம் நடத்தினார் ரஜினி. அவரது ஆயுள் விருத்திக்காக இந்த யாகம் நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதே தினத்தில், அண்மையில் கேரள முதல்வரோடு காலால் செல்ஃபி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவையும் தனது இல்லத்துக்கு அழைத்திருந்தாராம் ரஜினி. மகிழ்வான அந்தத் தருணத்தில் பிரணவுடன் தானும் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்ட ரஜினி, “உங்க அப்பா என்ன வேல செய்யுறாங்க?” என்று கேட்டாராம். அதற்கு, “எங்க அப்பா கார்பென்டர் வேலை பாக்குறாங்க” என்று பிரணவ் சொன்னதும் கண்கள் பிரகாசமான ரஜினி, “ஓ... அப்டியா? நானும்கூட ஒண்ணரை வர்ஷம் கார்பென்டர் வேலை பாத்துருக்கேன் கண்ணா” என்று நெகிழ்ந்தாராம்.

விஜயபாஸ்கரை வீழ்த்த அரசகுமார்?

ஸ்டாலினைப் பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறார் பி.டி. அரசகுமார். ஆனால், “அதெல்லாம் சும்மா... அரசகுமார் திமுகவில் செட்டிலாவது என்பது ஏற்கெனவே திட்டமாகிவிட்டது. விராலிமலை தொகுதியில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தற்போது இறங்குமுகம். இதைத் தெரிந்துகொண்டு தனது தொகுதிக்குட்பட்ட மாற்றுக் கட்சிக்காரர்களை  ‘பல வகை’களிலும் வளைக்கிறார் விஜயபாஸ்கர். இந்த நிலையில் அவரை எதிர்க்க வலுவான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருந்தது திமுக. இதைத் தெரிந்து கொண்டுதான் சமயம் பார்த்து திருவாய் மலர்ந்து திமுகவில் இணைந்துவிட்டார் அரசகுமார்” என்கிறது அதிமுக வட்டாரம். விஜயபாஸ்கரின் பணபலத்தை அரசகுமாரால் சமாளிக்க முடியுமா?” என்று கேட்டால், “பணத்துக்கா முடை... பிரேமானந்தா சாமியார் காலத்துல சேர்த்து வெச்சதே இருக்குதே” என்று கண் சிமிட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in