ஹாட் லீக்ஸ்: அடிச்சது யோகம் அம்மணிக்கு!

ஹாட் லீக்ஸ்: அடிச்சது யோகம் அம்மணிக்கு!

பொன்னாருக்கு போட்டியா புத்தகம் வருது!

நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் திமுக எம்.பி-யான ஹெலன் டேவிட்சன், கடந்த 2009 - 2014 காலகட்டத்தில் தான் எம்பியாக இருந்தபோது செய்த பணிகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார். மே 25-ல், நாகர்கோவிலில் புத்தகம் வெளியீடு. தேர்தல்கூட முடிந்துவிட்டதே... இப்போது எதற்காக இப்படியொரு ஏற்பாடு என்று கேட்டால், “பொன்.ராதாகிருஷ்ணன் அளவுக்கு இந்தத் தொகுதிக்காக யாருமே செயல்படவில்லை என்று தேர்தல் சமயத்துல பாஜக காரங்க பெரும் பிரச்சாரம் பண்ணிட்டாங்க. அதை முறியடிக்கத்தான் அக்கா தன்னோட சாதனைகளைச் சொல்லி புத்தகம் போடுறாங்க” என்கிறார்கள் கழக கண்மணிகள்!

அடிச்சது யோகம் அம்மணிக்கு!

கொளுத்தும் வெயிலில் வாக்குப் பெட்டிகள் சகிதம் குளு குளு போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் வைரலானவர் ரீனா துவேதி. உபி மாநிலத்தின் தேவரியாவில் பொதுப்பணித்துறை அலுவலராகப் பணியாற்றும் இவருக்கு லக்னோவில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் ரீனா, கூலிங்கிளாஸ் கண்களும் கையில் வாக்குப் பெட்டியுமாய் நடந்து வந்ததை யாரோ ஒருவர் படமெடுத்திருக்கிறார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி  ‘மஞ்ச சேலைக்காரி’ என உபி வாசிகள் ரீனாவை வாஞ்சையுடன் கொண்டாடினார்கள். இந்த ரெஸ்பான்ஸில் மயங்கிய ரீனா, தனது தனிப்பட்ட படங்களையும் முகநூல் வழியாக வைரலாக்கினார். இதனால்  மீடியாக்களும் அவரது படங்களைப் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டன. இதன் விளைவு, தற்போது  சினிமாவில்  நடிக்க  பாலிவுட்டில் இருந்து ரீனாவுக்கு அழைப்பு வந்திருக்கிறதாம். ஆக, விரைவில் உபி பொதுப்பணித் துறை ஒரு அழகான அலுவலரை இழக்கப் போகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in