ஹாட் லீக்ஸ்: பிரமாதம் பிரேமலதா!

ஹாட் லீக்ஸ்: பிரமாதம் பிரேமலதா!

இதென்னங்கப்பா புதுப் புரளியா இருக்கு!

சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழக்கையில் ஹீரோவாக இருப்பார்கள். நடிகர் பிரகாஷ் ராஜ் கிட்டத்தட்ட அந்த ரகம்தான். ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த ரப்பார்த்தி அணில்குமார் என்ற இளைஞர், பிரகாஷ் ராஜ் சினிமாவில் எப்படி இருப்பாரோ, அப்படித்தான் நிஜவாழ்க்கையிலும் இருப்பார் எனத் தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டிருக்கிறார். அதனால், பிரகாஷ் ராஜை கண்மூடித்தனமாக வெறுக்கும் அவர், “பிரகாஷ் ராஜை தேர்தலில் தோற்கடிப்பேன்” என்று சொல்லி பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தற்போது பெங்களூருவில் வசிக்கும் அணில்குமார் ஒரு தனியார் நிறுவன ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது!

ராணிக்கு வாக்குக் கேட்கும் இளவரசி!

திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான், தனிப்பட்ட முறையில் சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார். ‘புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தினால் ஓரளவுக்கு வெற்றி இலக்கை எட்டிப்பிடிக்க முடியும்’ என்று சொன்னதாம் சர்வே ரிப்போர்ட். இதையடுத்து தனது மகள் ராதா நிரஞ்சனியை அந்தத் தொகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு அனுப்பியிருக்கிறார் சாருபாலா. “ராணிக்கு வாக்குக்கேட்டு எங்கள் இளவரசி வருகிறார்” என்று அமமுகவினர் முன்னுரை கொடுக்க, “எங்ககிட்ட இல்லாத பணமா... நாங்கள் வகிக்காத பதவியா? இருந்தாலும் ஏன் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம் என்றால், நமது சமஸ்தானத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்பதற்காகத்தான்” என்று இளவரசி பிரச்சாரம் செய்வதை புதுக்கோட்டை சமஸ்தானத்து மக்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in