ஹாட்லீக்ஸ்: சிவகங்கையையே சுற்றிவரும் சிதம்பரம்!

ஹாட்லீக்ஸ்: சிவகங்கையையே சுற்றிவரும் சிதம்பரம்!

சிவகங்கையையே சுற்றிவரும் சிதம்பரம்!

தேர்தலில் தானே போட்டியிட்ட காலங்களில் கூட தனது தொகுதிக்காக சில நாட்கள் பிரச்சாரத்துக்கு ஒதுக்கிவிட்டு மற்ற நாட்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்குச் செல்வார் ப.சிதம்பரம். ஆனால், இந்த முறைஎப்படியாவது  மகனைக் கரையேற்றவேண்டும் என்பதற்காக சிவகங்கைக்குள்ளேயே சுற்றி வருகிறார். தினமும் ஐந்து இடங்களில் மகனுக்காகப் பிரச்சாரம் செய்கிறார் சிதம்பரம். மகனோ 30 முதல் 35 இடங்களில் மைக் பிடிக்கிறார்.

காத்தாடும் காங்கிரஸ் கூடாரம்!

தமிழக காங்கிரஸ்காரர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலேயே இல்லையாம். திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அவருக்கு தேர்தல் வேலை செய்வதற்காக மொத்தமாக திருச்சிக்கு வந்துவிட்டார்களாம். இதேபோல், ஈவிகேஎஸ்ஸின் விசுவாசிகள் தேனிக்கும், சிதம்பரம் விசுவாசிகள் எல்லாம் சிவகங்கைக்கும், இளைஞர் காங்கிரஸார் ஜோதிமணிக்காக கரூரிலும் கேம்ப் அடித்திருக் கிறார்களாம். இதனால், மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூடாரம் காத்தாடுகிறதாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in