ஹாட் லீக்ஸ்

ஹாட் லீக்ஸ்

“வாங்க காங்.”

 “நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகளை ஒதுக்கும் திமுக” என்றும், “இல்லை இல்லை பத்துத் தொகுதிகள் நிச்சயம்” என்றும் இரண்டு விதமான செய்திகள் சுற்றும் நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே, “வாங்க காங்.” என்று காங்கிரஸ் தேய்ந்துபோய்விட்டதை மறைமுகமாகச் சொல்லி கிண்டல் அடிக்கிறாராம். இதே தலைவர், “காங்கிரஸ்ல ஏழு கோஷ்டி இருக்கு. கோஷ்டிக்கு ஒரு ஸீட்டை வாங்கிட்டு ஆளவிடுங்க” என்று காங்கிரஸாரின் காதுபடவே கமென்ட் அடித்ததும் கதர் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

கோடியுடன் வாங்க!

 “40 கோடி ரூபாயை முன் பணமாக கட்டுவதாக இருந்தால் அறிவாலயத்துப் பக்கம் வாங்க” என்று எம்பி கனவில் இருக்கும் கழகக் கண்மணிகளிடம் கட் அண்டு ரைட்டாக சொல்லிக் கொண்டிருக்கிறதாம் திமுக தலைமை. அதேசமயம் அதிமுக தரப்பிலோ, ``வெற்றி வேட்பாளர் யாருன்னு ஆளை மட்டும் காட்டுங்க; மத்த சமாச்சாரங்கள நாங்க பாத்துக்குறோம்” என்கிறார்களாம்.

Related Stories

No stories found.