மக்கள் நாடாளுமன்றம்

திருச்சியில் நடைபெற்றது
திருச்சியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றம்
திருச்சியில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி பாண்டமங்கலத்தில் 27 ஆம் தேதியன்று காலை மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் விரோத சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவற்றை எதிர்த்து மக்கள் மாதக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு விரோதமான அந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதனால் மக்களைச் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆகஸ்டு 23 முதல் 27 வரை மக்கள் நாடாளுமன்றம் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மண்டலத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 27 காலை 9 மணிக்கு திருச்சி மாநகர் 60வது வார்டு உறையூர் பாண்டமங்கலத்தில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது. எம்.செல்வராஜ் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் அவை தொடங்கியது. அவைத் தலைவராக அகில இந்திய வங்கி யூனியன் பொதுச் செயலாளர் ராமராஜ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். முதலில் விவசாயிகள் போராட்ட களத்தில் உயிர்நீத்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்கள் நாடாளுமன்றம்
மக்கள் நாடாளுமன்றம்

வேளாண் அமைச்சராக சூர்யா, மின்சார அமைச்சராக ஆனந்தன், நிதியமைச்சராக வசந்தி ஆகியோர் செயல்பட்டு சட்ட முன்வடிவை தாக்கல் செய்து பேசினர். எதிர்க்கட்சி வரிசையில் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம்பெற்றனர். விவாதத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு முன்னாள் உறுப்பினர் எம் செல்வராஜ் துவக்கி வைத்து பேசினார். உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர்.

இறுதியாக சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் சத்தியா மக்களுக்கு விரோதமான வேளாண் மற்றும் மின்சார திருத்தம் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறும் தீர்மானங்களை முன்மொழிந்தார். அவை அனைவராலும் ஏகமனதாக ஏற்கப்பட்டது. தேசிய கீதத்துடன் மக்கள் நாடாளுமன்றம் நிறைவுற்றது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in