நல்ல புத்திகொடு; இந்து முன்னணி நூதன போராட்டம்

நல்ல புத்திகொடு; இந்து முன்னணி நூதன போராட்டம்
நாகராஜா கோயில் வாசலில் நின்று முறையிடும் இந்து முன்னணி நிர்வாகிகள்

கரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை தொடர்பாக தொடர்ந்து வந்து விழும் எச்சரிக்கையின் காரணமாக, விநாயகர் சிலைகளை வீதியில் வைத்து வழிபாடு செய்ய தடைவிதித்துள்ளது அரசு. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் நூதனப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

நாகர்கோவிலில் பிரசித்திபெற்ற நாகராஜர் ஆலயம், கோதை கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், வடசேரி பாலகிருஷ்ணன் ஆலயம் ஆகியவற்றின் முன்பு இன்று திடீரென இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் பிரார்த்தனையையே போராட்ட வடிவில் செய்தனர். ‘விநாயகர் சதுர்த்தி தடை; அதை உடை’ எனக் கோஷம் எழுப்பியவர்கள் தொடர்ந்து, ‘தமிழக அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு’ என பிரார்த்தனை செய்து, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் இறைவனிடமே முறையிட்டனர்.

‘அரசுக்கு நல்ல புத்திகொடு’ என இந்து முன்னணியினர் நடத்திய இந்த நூதனப் போராட்டத்தை, பொதுமக்கள் பலரும் ஆச்சர்யத்தோடு பார்த்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in