பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

கம்பம்

டீக்கடை ஒன்றில்...

“அண்ணே, 500 ரூபாய்க்கு சேஞ்ச் இருந்தா குடுங்க."

“என்ன தம்பி, இவ்வளவு கடையிருக்கும்போது என்கிட்ட வந்து சேஞ்ச் கேட்கிறியே?”

“எல்லா கடையிலும் கூட்டமா இருந்துச்சு. நீங்க மட்டும்தான் தனியா நிக்கிறீங்க, அதான்..."

“ஆளே இல்லாத கடையில 500 ரூபாய்க்கு எப்படி தம்பி சில்லறை கிடைக்கும்? வெறுப்பேத்தாம வேற கடையில போய் கேளு. போ!”

- பெ.பச்சையப்பன்,

கம்பம்

தோப்புத்துறை

பெட்ரோல் பங்கில்...

“என்ன சார் இ-பைக்கை இங்க கொண்டுவந்திருக்கீங்க? பழக்கதோஷமா?"

“இனிமே உங்ககிட்ட வந்து இருநூறு முந்நூறுன்னு கொடுத்து அழ வேண்டிய அவசியம் இல்லேன்னு காட்டவந்தேன் தம்பிகளா!”

“சரி சரி... எதுக்கும் கொஞ்சம் தள்ளியே போய் ஸ்டார்ட் பண்ணுங்க... எங்களுக்கு உயிர் மேல ஆசை இருக்கு.”

-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

மதுரை

ஆரப்பாளையம் உணவகம் ஒன்றில்...

“என்ன இது... திடுதிப்புன்னு பரோட்டா விலையை 13 ரூபாய் ஆக்கிட்டீங்க?”

“என்ன பண்றது... பெட்ரோல் விலை ஏறிடுச்சே?”

“பரோட்டாவ பெட்ரோல்லயா போடுறீங்க..?

“ஏன் தம்பி... மாவு, மசாலா, எண்ணெய் வர்ற வண்டியெல்லாம் தண்ணியிலயா ஓடுது? லா பாயின்ட் பேச வந்துட்ட...”

- கா.பசும்பொன்,

மதுரை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in