பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

வேளாங்கண்ணி

பெட்ரோல் பங்க் ஒன்றில்...

“ஏம்பா தம்பி... பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குக் கீழ குறையவே குறையாதா?"

“குறையும் சார்! நீங்க முக்கால் லிட்டர்தான் போட்டுக்கணும்... பரவாயில்லையா?!"

“அப்புறமா சிரிச்சிக்கிறேன். முதல்ல பெட்ரோல் போடுப்பா. அடிக்கிற வெயில்ல நீ வேற!”

-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

கமுதி

இளநீர் கடை ஒன்றில்...

“என்னப்பா இது... இளநீர் ஐம்பது ரூபாய் சொல்றியே! இது அநியாயம் இல்லையா?!”

“எதுங்க அநியாயம்... இத்தினியோண்டு தக்காளியை நூறு ரூபாய்க்கு விக்கும்போது இம்மாம்பெரிய இளநிய ஐம்பது ரூபாய்க்கு விக்கிறதா அநியாயம்?”

(இளநீர் கேட்டவர் கப்- சிப் ஆகி காசை நீட்டுகிறார்)

-எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

கோவை

கோயில் வாசலில்...

“வசதி இல்லாதவங்க பிள்ளையாருக்குச் சூட்டத்தானே அருகம்புல் விக்கிறீங்க! அதுக்கும் இவ்வளவு விலை சொன்னா எப்படி?”

“நாங்க என்னங்க பண்றது! ஏதோ போர் நடக்குதாமே... அதனால விலைவாசி ஏறிடுச்சு.”

“ஆமாமா... உக்ரைன்ல போர் நடக்கிறதாலதான் உள்ளூர் புல் விலையேறுது. விடுங்க!”

(வெறுங்கையுடன் கோயிலுக்குள் செல்கிறார் பக்தர்)

-பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in