பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

தஞ்சாவூர்

தெற்கு வீதியில் இரு பெண்கள்...

“என்னடீ... அட்சய திருதியைக்கு உன் வீட்டுக்காரர் நகை வாங்கிக்குடுத்தாராமே?”

“யாரு... கூடவே திரியற உன் வீட்டுக்காரர் சொன்னாராக்கும்? உடைஞ்சுபோன இக்கிணோன்டு திருகாணிய மாத்திக் குடுத்துட்டு ஊர் முழுக்க சொல்லிட்டுத் திரியுதா அந்தாளு..? வரட்டும் பேசிக்கிறேன்!”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

நாகப்பட்டினம்

அரசுப் பேருந்தில் நடத்துநரும் பெண்மணியும்...

“புள்ளைக்கு எத்தனை வயசும்மா?”

“நாலு வயசு சார்!”

“ஏம்பா தம்பி... எத்தனாவது படிக்கிற?”

"ரெண்டாவது சார்!"

“அஞ்சு வயசு வரைக்கும் ஃப்ரீன்னு சொன்னதும்... ஏழு வயசு புள்ளைக்கு டக்குனு மூணு வயசு குறைச்சுட்டியேம்மா?!"

(அருகில் உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்)

-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

கமுதி

டீக்கடையில் இருவர்...

“ஒரு வருஷத்துல பத்து வருஷ சாதனைகள் பண்ணிய எங்க தளபதி... இப்படி உதயநிதிக்கு அமைச்சர் பதவி குடுக்காம விட்டுட்டாரே!”

“இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணினா எப்படி? அடுத்தாண்டு சாதனையில அதுவும் வந்துடும் கவலைப்படாதீங்க!”

(ஆளுங்கட்சிக்காரர் ஆவேசத்துடன் வெளிநடப்பு செய்கிறார்)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

திருச்சி

பெட்ரோல் பங்க் ஒன்றில்...

“என்னய்யா... நேத்துதான் பெட்ரோல் போட்டேன். அதுக்குள்ளாற தீர்ந்து போயிடுச்சே?"

“அப்படி எவ்வளவுக்குப் பெட்ரோல் போட்டீங்க?"

“ஐம்பது ரூபாய்க்கு!"

“ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா, பங்க்கைத் தாண்டுறதுக்கே பாதி கரைஞ்சிடும்... போங்க சார்!”

-சிவம்,

திருச்சி

Related Stories

No stories found.