பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஒவியம்: முத்து

திருச்சி

டீக்கடை ஒன்றில்...

“அதான் இனி மாஸ்க் போட வேண்டிய அவசியமில்லைன்னு சொல்லிட்டாங்களே... இன்னமும் ஏண்ணே மாஸ்க் போட்டு அலையறீங்க?”

"நான், விஜய் மல்லையா, நீரவ் மோடி எல்லாம் ஒரே ராசிக்காரங்க. எங்க முகத்தையெல்லாம் பார்த்தா நிறைய பேரு விட மாட்டாங்க..!"

“அட! அந்தக் க்ரூப்பா நீங்க..?!”

-சிவம்,

திருச்சி

கமுதி

அரசுப் பேருந்து ஒன்றில்...

“சார்! பக்கத்துல தூங்குறவரு டிக்கெட் எடுத்துட்டாரா?”

“இவரு யாருன்னே எனக்குத் தெரியாதுங்க!”

“என்னங்க நீங்க, தெரியாதவரையா இவ்வளவு நேரமா ஒங்க தோள்ல சாச்சு தூங்க வச்சிருந்தீங்க?”

“குடிகாரங்களையெல்லாம் பஸ்ல ஏத்துறீங்க... அவங்க போதையில பக்கத்து சீட்காரங்க மேல படுத்து தூங்குறாங்க... இதுல எங்ககிட்டேயே கேள்வியும் கேட்கிறீங்க. எல்லாம் தலையெழுத்து!”

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

வேதாரண்யம்

டீக்கடை ஒன்றில்...

“என்னப்பா டீயில சூடே இல்லை?”

“கியாஸ் விலை ஏறிப்போச்சே சார். அதான் ஸ்டவ்வை அப்பப்ப ஆஃப் பண்ணிடுவேன். சரி, வடை சாப்பிடுங்க சார்.”

“வேண்டாம்பா சாமி, ஆயில் விலை ஏறி இருக்குன்னு நீ தந்தூரி அடுப்புல வடையைச் சுட்டாலும் சுட்டிருப்பே. ஆளை விடு!”


-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in