பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

சென்னை

ராயப்பேட்டையில் மேன்ஷன்வாசிகள் இருவர்...

“முன்னாடி எல்லாம் இலங்கை கடற்படைதான் நம்ம மீனவர்களைப் பிடிச்சிட்டிருந்தாங்க, இப்ப இந்தோனேசியா, செஷல்ஸ் தீவுக்காரங்களும் அதை ஆரம்பிச்சுட்டாங்களேப்பா..?”

“அவங்களுக்கும் இலங்கை மாதிரி நம்மகிட்ட கடன் உதவி தேவைப்படுதுபோல?”

“என்னடா சொல்றே... ஒண்ணுமே புரியலையே?!”

“பேப்பர்ல ரேப், மர்டர் நியூஸா படிச்சிட்டு இருந்தா இதெல்லாம் எப்படிடா உனக்குப் புரியும்?”

- எ.எம்.எம்.ரிஸ்வான்,

சென்னை

திருப்பூர்

ஒரு பேக்கரியில் இரு நண்பர்கள்...

“நீ நேத்தைக்கு ஃபேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டிருந்தியே, சூப்பரா இருந்துச்சு மாப்ள!”

“அப்பவே லைக் போட்டு, கமென்ட்லயே இதைச் சொல்லியிருக்கலாமே மாப்ள... ஒரு டீக்கும், பப்ஸ்ஸுக்கும் எப்படியெல்லாம் உருட்டறே!”

- சாரதி,

திருப்பூர்

கமுதி

டீக்கடை ஒன்றில்....

“பட்ஜெட்ல என்ன போட்டிருக்காங்கன்னு பாக்கணும்... இன்னக்கி பேப்பர் எங்கே தம்பி?”

(கடைக்காரர் எல்லா இடத்திலும் தேடிவிட்டு) “அய்யோ...பெருசு! பேப்பர்லதான் நீ ஒக்காந்திருக்கே!”

“ஓ! அப்படியா... ஸாரி தம்பி! கண்ணாடி போட்டுட்டு வராததால சரியா கண்ணு தெரியல. பேப்பர் இருக்கட்டும். நா போயி கண்ணாடிய எடுத்துட்டு வந்துட்டு, அப்புறம் பேப்பர் பாத்துக்கிறேன்...”

(கடையெங்கும் சிரிப்பொலி)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in