பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

நாகப்பட்டினம்

ஒரு டீக்கடையில்...

“அண்ணே! ‘மூணு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு’ன்னு நியூஸ்ல போட்டுருக்கே அப்படின்னா என்னண்ணே?!"

“காஸ், எண்ணெய் விலை உயர்வை வெச்சி நாங்க டீ, வடை விலையை உயர்த்தினோம்ல. அதே மாதிரிதான் தம்பி!”

“அங்கே இங்கே சுத்தி கடைசியா சிட்டி ரவுண்டானா மாதிரி உங்க மேட்டருக்கு வந்துட்டீங்க!”

“பின்னே? உன்னை மாதிரி கடன் பார்ட்டியை எல்லாம் வெச்சி கடை நடத்தணும்ல?!"

(கஸ்டமர் காசைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டுகிறார்!)

-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

தஞ்சாவூர்

மகர்நோன்புச்சாவடி முச்சந்தில் இருவர்...

“எங்கேப்பா... ரெண்டு நாளா ஆளையே காணோம். மாமனாரைப் பார்க்க ஊருக்குப் போயிட்டீயாக்கும்?"

“ஆமா... என் மாமனார் கவர்னரு... நான் சூப்பர் ஸ்டாரு. மரியாதை நிமித்தமா பார்க்கப் போயிட்டேன். ஏண்டா நீ வேற! ஆடிக்கு அம்மா வீட்டுக்குப் போன பொண்டாட்டியைப் பார்த்துட்டு வரலாம்னு போனா... ஆளைக் காணோம்னு போஸ்டரே ஒட்டிடுவீங்க போல!”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

கம்பம்

காந்தி சிலை அருகே இருவர்...

“மாப்ள, எங்க கிளம்பிட்ட?”

“ஏன்... நான் 'டாஸ்மாக்'ல வேலை செய்யறது உனக்குத் தெரியாதா..?!"

“தெரியும், போதைப்பொருள் வித்தா கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு கவர்ன்மென்ட் வார்ன் பண்ணியிருக்கு. பார்த்துப் போ.”

“அட போடா! ஹாட் ட்ரிங்ஸையெல்லாம் இப்ப கூல் ட்ரிங்ஸ் மாதிரி வாங்கி பல பேர் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுல டாஸ்மாக் சரக்கு மட்டும்தான் போதைப்பொருளாக்கும்?!”


- பெ.பச்சையப்பன்,

கம்பம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in