பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

சென்னை

உயர்தர சைவ ஹோட்டல் ஒன்றில்...

“என்ன சார் சாப்பிடுறீங்க..?”

“ஜிஎஸ்டி இல்லாத ரெண்டு இட்லி, ஒரு வடை கொண்டு வாப்பா!”

“ஓ... உங்களுக்கு ஜிஎஸ்டி வியாதியா..? அப்போ... எதிர்ல இருக்கிற டீக்கடைக்குப் போங்க சார்.”

“நிலைமையைப் பார்த்தா டீ குடிச்சுக்கூட வாழ்க்கையை நடத்த முடியாது போல இருக்கே!”

(புலம்பியபடி வெளியேறுகிறார்!)

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

சென்னை

பேருந்து நிறுத்தம் ஒன்றில்...

“என்னக்கா ஒரு வாரமா பிங்க் காஸ்ட்யூமாவே இருக்கு... ஹாஸ்பிடல் ஸ்டாப்பாகிட்டீங்களா?!”

“ஃப்ரீ பஸ்ஸை ‌பிங்க் கலராக்கிட்டாங்ளே... அதான் மேட்சிங் டிரஸ்!"

“இனி ஃப்ரீ பஸ்ல போகணும்னா இதுதான் யூனிஃபார்ம்னு சொல்லி... பிங்க் கலரை ஆடி அதிரடி ஆஃபர் ஆக்கிடாதீங்க!"

-சு‌.மூன்சுதாகரன்

வானவன்மகாதேவி

திருப்பூர்

மினி பஸ்ஸில் ஒரு பாட்டியும் நடத்துநரும்...

“கண்டக்டர் தம்பி, இப்படி சவுண்டா பாட்டுப் போட்டா எப்படிப்பா உள்ளே உட்கார்றது? கொஞ்சம் கம்மி பண்ணுப்பா!”

“சவுண்டு கம்மியா வச்சா, பஸ் போகும்போது டிரைவர் தூங்கிடுவாரு. பரவாயில்லையா பாட்டி?”

(பயணிகள் மத்தியில் பயம் கலந்த சிரிப்பலை!)

- சாரதி,

திருப்பூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in