பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க

நாகப்பட்டினம்

ஹோட்டல் ஒன்றில் நண்பர்கள் இருவர்...

“என்னடா... இஷ்டமான இட்லியை விட்டுட்டு பரோட்டாவுக்கு மாறிட்டே?"

“ரைஸ் ஐட்டத்தையெல்லாம் தவிர்த்துடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

“ஏன்... சுகர் ஏதும் வந்துடுச்சா?!”

“ஜிஎஸ்டி உயர்ந்துடுச்சுல்ல... அதான்!"

“எப்படியும் காசு நான் தான் கொடுக்கப்போறேன். அப்புறம் எதுக்கு இந்த பில்டப்பு?”

-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்...

“நான் அப்பவே சொன்னேன்ல... ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்சுக்கும் ஏதோ டீலிங் இருக்குன்னு. ரெண்டு பேருக்கும் கரோனாவாம். இப்ப நம்பறியா?!”

“ஏன்... ராமதாஸையும் சேர்த்துக்கோயேன்! ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆகி டியூட்டியை ஆரம்பிச்சுட்டாரு... கரோனாவையெல்லாம் கட்சி அரசியல்ல கோத்துவிட்டு ஏண்டா குழப்பத்தை உண்டு பண்றீங்க?”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

திருநெல்வேலி

ஹோட்டல் ஒன்றில் இருவர்...

“எலே, சோத்தையே உத்துப் பாக்கறீயே... என்ன சேதி?”

“நாம் திங்கற அரிசியில பேரு எழுதியிருக்கும்னு சொல்லுதாகளே... அதான் பார்த்தேன்.”

“ஜிஎஸ்டி-யைத் தாம்லே அப்படி சொல்லியிருக்காக போல!”

“ஆனாலும், அது இனிஷியல்தானே... முழுப் பெயர் இல்லையே?”

(முதலாமவர் முறைக்கிறார்!)

- மதுரை முருகேசன்

தஞ்சாவூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in