பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஒவியம்: முத்து

தோப்புத்துறை

பெருமாள் கோயில் அருகே...

“என்ன அண்ணே முகத்துல ஒட்டு... தலையில கட்டு?"

“என்ன பண்றது? எல்லாம் தலைமைப் பிரச்சினைதான்...”

“நமக்கெல்லாம் எதுக்குண்ணே அரசியல்?”

“அட நீ வேற! அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் நடந்த சண்டையில வந்த கட்டுப்பா இது. சோதிக்காதீங்கடா டேய்!"

-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

கரூர்

வாங்கலில் உள்ள டீக்கடை ஒன்றில்...

“என்னப்பா... ஒத்தையா வந்துருக்கே... எங்கே உன் தோஸ்து?"

“அந்த நாயைப் பத்தி என்கிட்டே கேட்காதீங்க. இனிமே நான் ஒத்தையாத்தான் வருவேன். அவன் யாரோ நான் யாரோ!”

“உங்க பிரச்சினை எப்படியோ போகட்டும். ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கின கணக்கை முடிச்சிட்டுப் போங்கப்பா. நீபாட்டுக்கு புதுக் குழு, புதுக் கணக்குன்னு ஆரம்பிச்சிடாதே!"

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

திருச்சி

சலூன் கடை ஒன்றில்...

“டை எப்படி சார் அடிக்க? ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா?"

“என்னப்பா கேட்கற?”

“அட... ஒற்றைத் தலை'மை'யா? இல்ல டபுள் கோட்டிங்கோட இரட்டைத் தலை'மை'யான்னு கேட்டேன்!"

“கடையில அரசியல் பேசாதீங்கன்னு போர்டு வச்சுக்கிட்டு நீ அதிமுக சண்டை பத்தியெல்லாம் பேசிறியேப்பா...”

-சிவம்,

திருச்சி

மதுரை

கரிமேடு வடைக் கடையில்

“ஏம்பா... வடையோடு ரெண்டு பஜ்ஜி செட் வாங்கிக்கட்டுமா?”

“வேணாம். கேஸ் ட்ரபிள்!”

“வாயுத் தொல்லையா...?”

“இல்லை. கையில காசு கம்மியா இருக்கு.”

“அட லூசு! கேஷ் ட்ரபிள்னு சொல்லு.”

“ஆமா... உனக்குப் புளி போட்டு விளக்கணும்!”

- கா.பசும்பொன்,

மதுரை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in