பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

தஞ்சாவூர்

அரண்மனை அருகே இருவர்...

“என்னடா தலை இது... வெள்ளையும் இல்லாம கறுப்பும் இல்லாம வேற ஏதோ கலர்ல இருக்கு?”

“அதுவா?! தலையைக் கொஞ்சம் கவனிக்காமே விட்டுட்டேன்! அதான்...”

“இல்லே...இரட்டைத் தலை-மைதான் இப்ப ட்ரெண்ட்டுன்னு விட்டுட்டேன்னு நினைக்கிறேன். மூணாவதா ஒரு கலரா மாறுறதுக்குள்ளே ஒற்றைத் தலை-மை அடிச்சிடு!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

கோவை

காந்திபுரம் அருகே

“என்னப்பா இது... நீ அடிச்ச குவாட்டர் பாட்டில் பத்தாதுன்னு கீழே கிடக்கிற பாட்டிலை எல்லாம் பொறுக்கிட்டு இருக்க?”

“நாளைக்குக் கொடைக்கானல் போறேன்... இதையெல்லாம் கொடுத்தால் பாட்டிலுக்கு 10 ரூபாய் கிடைக்கும். பாக்கெட் மணிக்கு ஆச்சு!”

“இதை ஒரு பிசினஸாவே ஆக்கிட்டியா?”

“டீசன்டா பேசுங்கண்ணே. ஏற்கெனவே எங்களுக்கு மதுப்பிரியர் பட்டம் இருக்கு. இப்ப சுற்றுச்சூழல் பாதுகாவலர் பட்டமும் கிடைக்கும் பார்த்துக்கோங்க!”

- பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

கமுதி

மதுரை செல்லும் தனியார் பேருந்து ஒன்றில்....

“மதுரைக்கு ஒரு ஈபிஎஸ் டிக்கெட் கொடுப்பா!”

“அதென்ன ஈபிஎஸ் டிக்கெட்?”

“அடடா! இது புரியலையா? ஒத்த டிக்கெட் கொடுன்னு கேட்கிறேன்.”

(பேருந்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in