பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

திருச்சி

டவுன் பஸ் ஒன்றில்...

“யோவ்... நீயெல்லாம் ஆம்பளைதானா?”

“என்ன கண்டக்டர்... திமிரா?”

“அய்யய்யோ இல்லை... ஆம்பளைன்னா டிக்கெட் எடுக்கணும்ல? அதுக்குத்தான் கேட்டேன்.”

- சிவம்,

திருச்சி

மதுரை

கரிமேடு டீக்கடை வாசலில்...

“என்னடா ஒரு வாரமா ஆளையே காணோம்...?”

“காய்ச்சல், சளி, உடம்பு வலி, தொண்டை வலி, பாடா படுத்தியெடுத்திட்டு.”

“ஏன் சுத்தி வளைச்சு பேசுறே? ‘ஒமைக்ரான்’னு ஒத்த வார்த்தையில சொல்லு.”

(சுற்றியிருப்பவர்கள் தெறிக்கிறார்கள்!)

- பாளைபசும்பொன்,

மதுரை

தஞ்சாவூர்

மீன் கடை அருகே...

“என்னய்யா... சனிக்கிழமையே மீன் கடைக்கு வந்திட்டே... நாளைக்கு லாக் டவுன் இல்லை... தெரியும்ல”

“நமக்குத் தெரியுது... நாக்குக் கேட்குமா? சனிக்கிழமைன்னா மீன் குழம்புன்னு செட் ஆயிடுச்சு. இப்ப ஞாயிறு வேற சிக்கன், மட்டன்னு போகணும். இந்தக் கரோனாவால இதுலயும் ரெட்டிப்புச் செலவுதான்”

(நண்பர் சிரிக்கிறார்!)

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்,

தஞ்சாவூர்

கோவை

ஆர்.எஸ்.புரம் அருகில் ஒரு பள்ளியில்...

“சார் ஸ்கூல் திறந்தாச்சு சரி. கரோனா போயிடுச்சா... பையனை அனுப்பலாமா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. அனுப்புறதும் அனுப்பாததும் உங்க இஷ்டம்; கட்டாயமில்லை.”

“அப்படீன்னா... ஃபீஸ் கட்டுறதும் கட்டாயமில்லைதானே?!”

(சம்பந்தப்பட்ட அலுவலர் போனைக் காதில் வைத்து பாவனை செய்தபடியே நழுவுகிறார்.)

- பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in