பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

தஞ்சாவூர்

மெக்கானிக் ஷாப்பில் இருவர்...

“ஏற்கெனவே வாங்குன காசையே திருப்பிக் குடுக்கலை. எந்த தைரியத்துலடா மறுபடியும் கைமாத்து கேட்கிறே?"

“ம்க்கும்! தினம் நாலு பேராச்சும் லோன் வேணுமானு லோ லோனு எனக்கு போன் பண்றாங்க. நீ மட்டும்தான் மாப்ஸ் என்னை நம்ப மாட்டேங்கிற!”

“எல்லாம் சரி மச்சி! சிங்கிள் டீக்கே சிங்கி அடிக்கிறது அவனுகளுக்குத் தெரியாது. ஆனா, எனக்கு நல்லா தெரியுமே!”


- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

வேளாங்கண்ணி

காஃபி ஷாப்பில் இருவர்...

“ரெண்டு மூணு நாளா பிளாக் அண்ட் ஒயிட் செக்டு சட்டை போட்டுத் திரியிறியே... என்னடா விசேஷம்?”

“சென்னையில செஸ் ஒலிம்பிக் நடக்குதுல்ல! அதான் ஒரு சேஞ்சுக்கு.”

“எது செஸ் ஒலிம்பிக்கா? அது ஒலிம்பியாட் மச்சி. ஆன்லைன்ல ரம்மி விளையாடுற உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை?”

-சு‌.மூன்சுதாகரன்,

வானவன்மகாதேவி

கோவை

ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளரும் சர்வரும்...

“இது என்னப்பா க்யூஆர் கோடைக் கையில டாட்டுவா ஒட்டி வச்சிருக்க?”

“அதுவா சார்! ஜிஎஸ்டி மேல பழியைப் போட்டு பல பேர் டிப்ஸ் கொடுக்கிறதை நிறுத்திட்டாங்க. கேஷ்ல பில் பணம் கொடுக்கிறதுல்ல... எல்லாம் கார்டு, பேடிஎம் தான். எங்களுக்கு எப்படி டிப்ஸ் கிடைக்கும்? அதான் இந்த ஐடியா!”

- பா.சக்திவேல்

கோயம்புத்தூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in