பேசிக்கிட்டாங்க
ஓவியம்: முத்து

பேசிக்கிட்டாங்க

தஞ்சாவூர்

பள்ளி ஒன்றின் வாசலில் வாட்ச்மேனும், மாணவரின் தந்தையும்...

“சொன்னா கேளுங்க சார். உள்ளே பசங்க மட்டும்தான் போகணும்.”

“என் பையன் எப்படிப் படிக்கிறான், எப்படி சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு நான் பார்க்கக் கூடாதா?"

“என்ன சார்! விட்டா சிஎம் மாதிரி க்ளாஸ் ரூம்ல உட்கார்ந்து பாடம் கவனிக்கிறேன்னு சொல்லுவீங்க போல. காலையிலே டென்ஷனாக்காம கிளம்புங்க சார்!"

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

நாகூர்

வெட்டாறு பாலம் அருகே இருவர்...

“நண்பா! காருக்கு பெட்ரோல் போடுறதுக்குக் காரைக்காலுக்குப் போறியே? இங்கேயே போட்டா உன் புண்ணியத்துல தமிழ்நாட்டுக்கு வரியாவது கிடைக்கும்ல?”

“அங்கே விலை கம்மி மச்சி! இந்தக் காசுல வண்டிக்கும் நமக்கும் சேர்த்தே பெட்ரோல்(!) போட்டுக்கலாம்.”

“அப்படிச் சொல்லு! நீதான் இதுல கில்லாடியாச்சே. இருந்தாலும் 'பெட்ரோல்' போட்டவுடனே பெட் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பு மச்சி. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”

- பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

கமுதி

பெட்ரோல் பங்க் ஒன்றில்...

“என்னண்ணே இது... பெட்ரோல் விலை குறைஞ்சிடுச்சான்னு அசால்ட்டா கேட்கிறீங்களே?”

“அதான் ஜனாதிபதி தேர்தலே வருதுல்ல! அதுக்குப் பெட்ரோல் விலை குறையாதா என்ன?”

“சரியா போச்சு போங்க! மக்கள் ஓட்டு போடும் எலெக்‌ஷன் வந்தா மட்டும்தான் பெட்ரோல் விலை குறையும். எம்எல்ஏ, எம்பி-க்கள் ஓட்டு போடுற எலெக்‌ஷனுக்கெல்லாம் எப்படிண்ணே குறையும்?”


- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in