பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஓவியம்: முத்து

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்....

“சொல்லி வச்ச மாதிரி எல்லா வேட்பாளர்களும் வடை சுடுறது, டீ போடுறதுன்னு ட்ரெண்டிங் பண்ணி டென்ஷன் ஏத்துறாங்க மச்சி!”

“ஒருவேளை தோத்துட்டா... இந்த ட்ரெண்டிங் அப்படியே கட்டிங் ஆகி தொழிலுக்குக் கைகொடுக்கும்ல. அதான்!”

“அதானே பார்த்தேன்... அரசியல்வாதிகள்னாலே தியாகிகள்தானே!”

(இருவரும் சிரிக்கிறார்கள்)

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

ஸ்ரீரங்கம்

ஒரு கோச்சிங் சென்டரில் ஒரு பெரியவரும், உரிமையாளரும்...

“ஏம்பா... இந்த 'அபாகஸ்'னால பார்லிமென்ட்டே படாதபாடு படுதுன்னு சொன்னாங்க. நீ அதுக்கு கோச்சிங் தரப்படும்னு போர்டு வெச்சிருக்கியே?!”

“அய்யோ சார்! அது அபாகஸ் இல்லை... பெகாசஸ். என்னன்னு தெரியாம எதையாவது பேசி என் பொழப்புல மண்ணு போட்டுடாதீங்க.”

- ஆர். பிரசன்னா,

திருச்சி

கமுதி

டீக்கடை ஒன்றில், உரிமையாளரும் வேட்பாளரும்...

“அண்ணாச்சி... இதுல ரெண்டாயிரம் இருக்கு வச்சுக்கோங்க.”

“ஸாரி தம்பி... நான் ஓட்டுக்கெல்லாம் பணம் வாங்குறது இல்லை...”

“அட நீங்க வேற... இது டீக்கடை பாக்கி அண்ணாச்சி! பணம் கொடுத்துட்டா மட்டும் எனக்கு ஓட்டா போடப்போறீங்க?!”

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in