பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஓவியம்: முத்து

தஞ்சாவூர்

கீழவாசல் மார்க்கெட்டில் இருவர்...

“என்ன நண்பா... தொடர்ந்து மட்டன், சிக்கன், மீனுன்னு வாங்கி ரகளை பண்றே... ரொம்ப வசதி போல?!”

“ஓட்டுக்காக ஒட்டுக்கா வந்த பணத்தை வேற என்ன பண்றதாம்? அதான் ஒரு கட்டு கட்டுறோம்!”

“ரொம்ப அலட்டிக்காதப்பா... தோத்துப்போன ஆளுங்க, ‘காசை வாங்கி கடுக்காய் குடுத்துட்டு கறி மீனுன்னு வாங்கிச் சாப்பிடுறியா’ன்னு காலரைப் பிடிச்சுடப் போறாங்க!”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

கமுதி

டீக்கடை ஒன்றில்....

“அண்ணே... ஏன் இப்படி... காலங்காத்தால வந்து கமல் கட்சி அதிக இடத்துல ஜெயிச்சுடுச்சுன்னு கதை விடுறீங்க?”

“கதை விடல தம்பி. உண்மைதான் சொல்றேன்... கமல்னா ‘தாமரை’ன்னு ஒரு அர்த்தம் இருக்கு தெரியும்ல. தனியா நின்னாலும் பாஜக கெத்து காட்டிருக்குல்ல... அதத்தான் அப்படிச் சொன்னேன்.

(முன்னவர் டீயை கேன்சல் செய்துவிட்டு நடையைக் கட்டுகிறார்!)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புலி

வேதாரண்யம்

ராஜாஜி பூங்காவில் இருவர்...

“என்ன மாப்ளே... மத்தியானம் தலையக்கூட தூக்க முடியாம கிடந்தே...?!”

“எல்லாம் எலெக்‌ஷன் ரிசல்ட் வந்த எஃபெக்ட் மச்சி!”

“எலெக்‌ஷன்ல ஜெயிச்ச கோஷ்டி எனக்கும்தான் பார்ட்டி வச்சாங்க. நான் ஸ்டெடியா இல்லையா?”

“நீ ஜெயிச்சவங்களோட சந்தோஷத்துல கலந்துகிட்ட... நான் தோத்தவங்களோட துக்கத்துல கலந்துகிட்டு ஆறுதல் சொன்னேன். அதான் தூக்கிடுச்சு!”

-ந.விஜய்ஆனந்த்,

தோப்புத்துறை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in