பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...
ஓவியம்: முத்து

திருச்சி

ஹோட்டல் ஒன்றில்...

“சாப்பிடும்போது மாஸ்க்கைக் கழற்றி டேபிள்ல வச்சிட்டு சாப்பிட்டேன். அதைப் பார்த்தீங்களா?”

“அய்யய்யோ... அது உங்க மாஸ்க்கா?”

“ஏன்... என்னாச்சு?”

“டேபிள் துடைக்கற துணி மாதிரியே மாஸ்க்கைப் போட்டிருந்தீங்களா... அதான் கிளீனிங் செய்யற பையன் அப்படியே துடைக்கும்போது சேர்த்து எடுத்துட்டான்.”

-சிவம்,

திருச்சி

தஞ்சாவூர்

பெட்ரோல் பங்க்கில் இருவர்...

"என்னப்பா... கூடியிருக்கா, குறைஞ்சிருக்கா?”

"இல்லே சார். அதே ரேட் தான்.”

“அதாவது... கூடினதோட நிக்குது. குறைய வாய்ப்பில்லை?"

“குறைஞ்சதோட நிக்கிறதே பெரிய சாதனைதான். சட்டுபுட்டுனு பெட்ரோல போட்டுக்கிட்டு நகருங்க சார். நீங்க வெயிட் பண்ற நேரத்துக்கு எக்குத்தப்பா கூடிடப்போகுது.”

- பா து பிரகாஷ்,

தஞ்சாவூர்

கும்பகோணம்

வங்கி ஒன்றில் இருவர்...

“சார், சார்! இந்த ஃபார்ம்ல விட்னஸ் கையெழுத்து ஒண்ணு போட்டுக் கொடுத்துட்டுப் போங்க சார்!"

“நீ யாருன்னே எனக்குத் தெரியாதேப்பா. எப்படி சைன் பண்றது?”

“பாக்கெட்ல நீங்கதான் பேனா வச்சிருக்கீங்க! அதான் உங்ககிட்ட கேட்டேன்!"

“அதுக்காக நீ வாங்குன லோனுக்கு என்னை ஜாமீன் கையெழுத்து போடச் சொல்றியா? பேங்குக்குப் பேனா எடுத்து வர்றது ஒரு குத்தமாய்யா?"

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,

நீடூர்

கமுதி

தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநரும் நடுத்தர வயது பெண்மணியும்...

“ஏம்மா இளோ கேப் விட்டு நிக்கிறீங்க? கொஞ்சம் ஒட்டி ஒட்டி நில்லுங்கம்மா.”

“கவர்மென்ட் எட்டி எட்டி நிக்கச் சொல்லுது. கண்டக்டரான நீங்க ஒட்டி ஒட்டி நிக்கச் சொல்றீங்க... இதுல எதை நாங்க ஃபாலோ பண்றது?”

(கப்சிப் ஆகிறார் கண்டிப்பு கண்டக்டர்!)

- எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in