பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

கமுதி

மதுரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில்...

“என்ன சார் நீங்க! கொஞ்சம் வேகமாத்தான் ஓட்டுனா என்ன? டவுன் பஸ் மாதிரி இப்படி மெதுவாவா ஓட்டுறது?”

“நீ இத டவுன் பஸ்ஸுன்னே கணக்குல வச்சுக்கய்யா. சும்மா தொணதொணக்காம இரு.”

“சரி! சந்தோசம்.... என் ஒய்ஃபுக்கு டிக்கெட்டுக்கு வாங்குன காச கொடுங்க... இது டவுன் பஸ்னு ஒத்துக்கிறேன்.”

(பேருந்தில் அனைவரும் சிரிக்க... கண்டக்டர் கப்சிப்!)

-எம்.கல்லூரி ராமன்,

கரிசல்புளி

சென்னை

டாஸ்மாக் கடை அருகில்...

“அடுத்த வருஷத்துல இருந்து டாஸ்மாக் சார்பாவும் காலண்டர் அடிச்சு கஸ்டமர்ஸுக்குக் கொடுக்கச் சொல்லணும்.”

“அதை மட்டும்தாண்டா பாக்கி வச்சிருந்தீங்க.... இப்ப அங்கேயும் காலண்டர் கேட்பீங்களாடா?”

“பின்னே... திருவள்ளுவர் தினத்துக்கு டாஸ்மாக் லீவுன்னு தெரியாம குடிஜனங்க தவிச்ச வாய்க்குத் தண்ணி(!) கிடைக்காம தத்தளிச்சதைப் பார்த்திருந்தா இப்படி கேட்டிருக்க மாட்டே.”

(நண்பர் தலையில் அடித்துக்கொள்கிறார்.)

- எ.எம்.முகமது ரிஸ்வான்,

சென்னை

கோவை

குனியமுத்தூரில் ஒரு டீக்கடை அருகில்...

“என்னப்பா பொங்கல் நல்லபடியா முடிஞ்சுதா?”

“என்னத்த சொல்ல... போன வருசம் அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகையை கவர்ன்மென்ட் கஜானாவுக்கே ரிட்டர்ன் அனுப்பினோம். இந்த முறை கைக்காசைச் செலவு பண்ணி கொண்டாட வேண்டியதாப்போச்சு...”

“அட குவாட்டர் கோவிந்தா! குடிமகனோட(!) உண்மையான கடமையை உங்கிட்டத்தாண்டா கத்துக்கணும்.”

-பா.சக்திவேல்,

கோயம்புத்தூர்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in