பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க
ஒவியம்: முத்து

பம்மல்

மருந்துக் கடை ஒன்றில்...

“அண்ணாச்சி, தலைவலி, ஜலதோஷம்... ஒரு மம்தா ப்ளஸ் தைலம் கொடுங்க.”

“சரியாப் போச்சு போங்க. அது மெந்தோ ப்ளஸ்.”

“தெரியும்... சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன்.”

“என்ன வேடிக்கை? அந்தம்மாவே ஏகப்பட்ட தலைவலில இருக்காங்க. நீங்க அவங்க பேர்லயே தலைவலி தைலம் கேட்கிறீங்க. என்னத்த சொல்ல!”

- ஏ. நாகராஜன்,

பம்மல்

திருப்பூர்

மளிகைக் கடை ஒன்றில்...

“அண்ணாச்சி... என் வீட்டுக்காரர் வந்தா, நான் மளிகைச் சாமான் வாங்கிட்டுப் போயிட்டேன்னு சொல்லிடுங்க!"

“சரிம்மா!”

“ஆனா, ரவை வாங்கினதை மட்டும் சொல்லிடாதீங்க... தெரிஞ்சா ராத்திரிக்கு மனுஷன் வீட்டுக்கே வரமாட்டார்!”

“பாவம்மா அந்த மனுஷன்!”

- சாரதி,

திருப்பூர்

கும்பகோணம்

பேருந்து நிலையத்தில் இரு கரை வேஷ்டிகள்...

“என்ன சகலை... உங்க தலைவர் துபாய் போய் இருக்காரு போல! வரும்போது உனக்கு ஏதாவது வாங்கிட்டு வருவாரா?"

“என்ன நக்கலா... உன் பையன் ரெண்டு தடவை வெளிநாடு போயிட்டு வந்திருக்கான். ஒரு சின்ன 'கோடாரி' தைலமாச்சும் எனக்கு கொடுத்து இருக்கானா?!”

“கோடாரி தைலமும் கோடிக்கணக்கான பட்ஜெட்டும் ஒண்ணா... நல்லா கம்பி கட்டுற மேன் நீ!”

- சத்திய மூர்த்தி. ஜி

கும்பகோணம்

திருச்சி

சமயபுரம் கோயில் வாசலில் இருவர்...

“செருப்பு தொலைஞ்சு போனதுக்கா இவ்ளோ சென்டிமென்ட்?! சனி விட்டதுன்னு விடுவியா... ஃபீல் பண்ணிட்டு இருக்கே...”

“600 ரூபாய்டா... என் பொண்டாட்டி கேட்டா என்ன சொல்றது?”

“செருப்பு பிஞ்சிடுச்சுனு சொல்லு.”

“அதை அவ சொல்லாம இருந்தா போதும்டா டேய்!”


-சிவம்,

திருச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in